மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீர் புகைமூட்டம் - ஊழியர்கள் அவதி

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீரென அதிகரித்த புகை மூட்டத்தால் ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமாக

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீர் புகைமூட்டம் - ஊழியர்கள் அவதி

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீரென அதிகரித்த புகைமூட்டத்தால் ஊழியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமாக, மேட்டூரில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் என மொத்தமாக 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் படுகிறது. தற்போது, முதல் பிரிவில் 210 மெகா வாட் மின் உற்பத்தி கொண்ட 4 அலகிலும் மின் உற்பத்தி நடந்து வருகிறது. 600 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட 2-வது பிரிவில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு 45 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது.