“யாரால் இப்படி செய்ய முடியும்?” - ‘புஷ்பா2’ அல்லு அர்ஜுனை புகழ்ந்த ராஷ்மிகா

‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்புக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

“யாரால் இப்படி செய்ய முடியும்?” - ‘புஷ்பா2’ அல்லு அர்ஜுனை புகழ்ந்த ராஷ்மிகா

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்புக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா 2’. உலகளவில் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டி சாதனை புரிந்துள்ளது. குறிப்பாக இந்தியில் வசூலைக் குவித்து வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு மனைவியாக ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா.

இந்நிலையில், ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பிற்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் ராஷ்மிகா. குறிப்பாக ஜந்தரா காட்சிகளில் அவருடைய உழைப்பு பிரமாதம் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள நடிகை ராஷ்மிகா, “புடவை அணிவதற்கும், புடவையில் நடனமாடுவதற்கும், புடவையில் ஆக்‌ஷன் காட்சிகளை நிகழ்த்துவதற்கும், புடவையில் டயலாக் பேசுவதற்கான தைரியமும், சக்தியும், ஆல்ஃபாத் தனம் இல்லாத ஒருவரை கற்பனை செய்து பாருங்கள்.