ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.922 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.922 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் மட்டும் 5 நாட்களில் ரூ.339 கோடியை வசூலித்துள்ளது. இந்தியில் அதிவேகமாக ரூ.300 கோடி வசூலை எட்டிய படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் படம் முதல் நாளில் ரூ.11 கோடியை வசூலித்தது. 5 நாட்களில் ரூ.35 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.922 கோடியை வசூலித்துள்ள நிலையில், விரைவில் ரூ.1000 கோடியை எட்டலாம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர். மேலும் இப்படம் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரூ.1300 கோடி சாதனையை முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது.