வங்கி கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறை தண்டனை

வங்கிக் கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வங்கி கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறை தண்டனை

மதுரை: வங்கிக் கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐஓபி வங்கியில் 2007-ல் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.42 கோடி மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து பிள்ளை, இடைத்தரகர்கள் கல்யாணசுந்தரம், மகாலிங்கம் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.