திருவள்ளூரில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட்
‘திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்டவைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி: ‘திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்டவைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 24- வது மாநாடு நேற்றும், இன்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரணி, கட்சியின் தியாகிகளுக்கு அஞ்சலி, வரவு - செலவு கணக்கு சமர்ப்பிப்பு, பிரதிநிதிகள் விவாதம் என, நடைபெற்றது இந்த மாநாடு.