வடமாநிலங்களில் இருந்து தஞ்சைக்கு வலசை வரும் அன்றில் பறவைகள்: வியந்து பார்க்கும் மக்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைத் தேடி பல்லாயிரக்கணக்கான அன்றில் பறவைகள் வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வலசை வந்துள்ளன

வடமாநிலங்களில் இருந்து தஞ்சைக்கு வலசை வரும் அன்றில் பறவைகள்: வியந்து பார்க்கும் மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைத் தேடி பல்லாயிரக்கணக்கான அன்றில் பறவைகள் வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வலசை வந்துள்ளன.

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கும். அதேநேரத்தில், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்களில்பாய்ந்து, ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நிரம்பிக்காணப்படும். டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் அதிகம் உள்ளதால், பறவைகளுக்குத் தேவையான உணவான பூச்சியினங்கள், நத்தைகள், மீன் குஞ்சுகள் உள்ளிட்டவை ஏராளமாக இருக்கும். இவற்றைப் பிடித்து உட்கொள்ள உகந்த காலம் என்பதால், ஏராளமான பறவை இனங்கள் வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் வலசை வருவது வழக்கம்.