விடுதலை பாகம் 2 - திரை விமர்சனம்

‘விடுதலை' முதல் பாகத்தில் கடைநிலைக் காவலர் குமரேசனால் (சூரி) கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி), மலைக்காட்டு வழியாக போலீஸ் படை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்கிறது.

விடுதலை பாகம் 2 - திரை விமர்சனம்

‘விடுதலை' முதல் பாகத்தில் கடைநிலைக் காவலர் குமரேசனால் (சூரி) கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி), மலைக்காட்டு வழியாக போலீஸ் படை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்கிறது. போகும் வழியில் பெருமாள் வாத்தியார், தன் காதல் கதையையும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, தான் உருவெடுத்த கதையையும் சொல்கிறார். இன்னொரு புறம் அவர் கைதை வைத்து அதிகாரவர்க்கம் வேறுவிதமாகத் திட்டம் போடுகிறது. அதே நேரத்தில் பெருமாள் வாத்தியாரை மீட்க அவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸுடன் மோதலில் ஈடுபடுகின்றனர். இதில் பெருமாள் வாத்தியார் தப்பித்தாரா, இல்லையா என்பதுதான் கதை.

'விடுதலை' முதல் பாகத்தில் மலைக் கிராமத்தில் சுரங்கம் தோண்டும் கார்ப்பரேட்களின் பின்னணியில் அரசியல், அதிகாரவர்க்கம் இருப்பதையும், தேடுதல் வேட்டை என்கிற பெயரில் எளிய மக்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்துவிடும் அரச பயங்கரவாதத்தையும் காட்சிப்படுத்தியிருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் இதன் பின்னணியில் மக்கள் தலைவராக உயரும் விஜய் சேதுபதியின் கதை மொழிக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.