விரிவாக்கப் பணிகளால் போடிமெட்டு மலைச்சாலை பாறைகளில் பிளவுகள் அதிகரிப்பு

விரிவாக்கப் பணிகளால் போடிமெட்டு மலைச்சாலையில் உள்ள பெரிய பாறைகளில் அதிகளவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாறைகள் உடைந்து விழும் அபாயம் தொடர்கிறது.

விரிவாக்கப் பணிகளால் போடிமெட்டு மலைச்சாலை பாறைகளில் பிளவுகள் அதிகரிப்பு

போடி: விரிவாக்கப் பணிகளால் போடிமெட்டு மலைச்சாலையில் உள்ள பெரிய பாறைகளில் அதிகளவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாறைகள் உடைந்து விழும் அபாயம் தொடர்கிறது.

தேனி மாவட்டத்தில் தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இந்த வனப்பாதை அமைந்துள்ளது. மலையடிவாரமான முந்தலில் இருந்து 20 கி.மீ நீளத்துக்கு இந்த மலைப்பாதை உள்ளது. சாலையின் ஒருபக்கம் செங்குத்தான கற்பாறைகளும் மறுபக்கம் பள்ளத்தாக்குகளும் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இச்சாலை அடுத்தடுத்து பல்வேறு காலகட்டங்களில் அகலப்படுத்தப்பட்டது.