விவாதக் களம்: உட்கட்சி நெருக்கடி; தேசியக் கெடுபிடி - தாக்குப்பிடிப்பாரா டிடிவி தினகரன்?

சிறைக்கு அனுப்பினாலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அரசியல் செய்வேன் எனும் தினகரனுக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் வரவேற்பு எப்படி இருக்கும்?

விவாதக் களம்: உட்கட்சி நெருக்கடி; தேசியக் கெடுபிடி - தாக்குப்பிடிப்பாரா டிடிவி தினகரன்?

நவம்பர் 9. வியாழக்கிழமை காலை ஊடகங்களில் வெளியான முதல் தெறிப்புச் செய்தியே, "ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீடு, நிறுவனங்களில் ரெய்டு. இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்" என்பதுதான். ஒட்டுமொத்த ஊடக கண்காணிப்பும் தினகரன் வீட்டுப்பக்கம் திரும்ப அவரோ மனைவி, மகளுடன் மிக இயல்பாக கோ பூஜையில் ஈடுபட்டுவந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சற்றும் அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்த டிடிவி தினகரன், இதற்கு முன் இல்லாத அளவுக்கு மத்திய அரசை சரமாரியாக விமர்சித்தார்.