“ஸ்டாலின் மருமகனும், அதிகாரிகளும் அதானியை சந்தித்தனர்” - ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை தகவல்

“அதானியை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சந்திக்கவில்லை என முதல்வர் அறிவித்தால், அவர்கள் சந்தித்ததற்கான ஆதாரங்களை வெளியிடுவேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

“ஸ்டாலின் மருமகனும், அதிகாரிகளும் அதானியை சந்தித்தனர்” - ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை தகவல்

சென்னை: “அதானியை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சந்திக்கவில்லை என முதல்வர் அறிவித்தால், அவர்கள் சந்தித்ததற்கான ஆதாரங்களை வெளியிடுவேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் இன்று (டிச.11) கூறியது: “மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை எந்த மாற்றம் செய்யாமல், ‘கலைஞர் கைவினைத் திட்டம்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு நேர் எதிரான திட்டமாக மட்டுமில்லாமல், தமிழகத்தில் கைவினை கலைஞர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிற ஒரு திட்டமாக தான் முதல்வர் ஸ்டாலின் அதை அறிமுகப்படுத்தி உள்ளார்.