13 தமிழக விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அனுமதி!
இலங்கை நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு மீன்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
ராமேசுவரம்: இலங்கை நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு மீன்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இலங்கையில் தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான சட்டம் இலங்கை மீன்வளத் துறையின் மூலம் கடந்த ஜனவரி 2018-ல் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பின்னர் இலங்கை கடற்படையினரால் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 220-க்கும் மேற்பட்ட படகுகள் கைப்பற்றி 1,700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.