20 முறை சினிமாவான ஒரே கதை! - பிரகலாதா
‘சதி லீலாவதி’ மூலம் நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், ‘ராஜகுமாரி’யில் ஹீரோ ஆவதற்கு முன், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.
‘சதி லீலாவதி’ மூலம் நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், ‘ராஜகுமாரி’யில் ஹீரோ ஆவதற்கு முன், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடித்த படங்களில் ஒன்று, ‘பிரகலாதா’. இது அவருக்கு 6-வது படம்.
அந்தக் காலகட்டங்களில் புராணக் கதையை மையப்படுத்தி படங்கள் உருவாக்குவது வழக்கமாக இருந்தது. அதனடிப்படையில் பிரகலாதனின் கதையை படமாக்கினார்கள். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்வதுதான் கதை.