‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியில் கூட்ட நெரிசல்: ஹைதராபாத்தில் பெண் உயிரிழப்பு

ஹைதரபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்​துள்ள படம், ‘புஷ்பா 2’.

‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியில் கூட்ட நெரிசல்: ஹைதராபாத்தில் பெண் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்​துள்ள படம், ‘புஷ்பா 2’. சுகு​மார் இயக்கி​யுள்ள இந்தப் படம் இன்று (டிச.5) வெளியானது.

தெலுங்​கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளி​யீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி​லும் ரிலீஸ் ஆகிறது. படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் டிக்​கெட் கட்ட​ணத்தை உயர்த்திக் கொள்ள தெலங்​கானா மற்றும் ஆந்திர அரசுகள் அனுமதி வழங்​கி​ன. மேலும், புக் ​மை ஷோ இணையதளத்தில் விரைவாக 10 லட்சம் டிக்​கெட்கள் விற்ற முதல் படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ பெற்றது.