‘2026 தேர்தலில் 200+ இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்’ - திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

"2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களில் - ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர்" என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘2026 தேர்தலில் 200+ இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்’ - திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: "2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களில் - ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர்" என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.12.2024) காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: