48 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகள்: வீர தீர சூரன் டீஸர் சாதனை

விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்-பார்ட் 2’.

48 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகள்: வீர தீர சூரன் டீஸர் சாதனை

விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்-பார்ட் 2’. அருண்குமார் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஆக்‌ஷன் திரில்லர் படமாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீஸர் யூடியூப்பில் வெளியானது. வெளியான 48 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது.