Mufasa: The Lion King விமர்சனம்: தொய்வில் மறைந்து போன விஷுவல் பிரம்மாண்டம்!
1994ஆம் ஆண்டு வெளியான ‘கல்ட் கிளாசிக்’ கார்ட்டூன் படமான ’தி லயன் கிங்’ உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. 2டி அனிமேஷன் வடிவில் இருந்த அந்த படத்தை கடந்த 2019ஆம் ஆண்டு லைவ் ஆக்ஷனாக உருவாக்கி வெற்றி கண்டது டிஸ்னி.
1994-ஆம் ஆண்டு வெளியான ‘கல்ட் கிளாசிக்’ கார்ட்டூன் படமான ’தி லயன் கிங்’ உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. 2டி அனிமேஷன் வடிவில் இருந்த அந்தப் படத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு லைவ் ஆக்ஷனாக உருவாக்கி வெற்றி கண்டது டிஸ்னி. தற்போது அப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றான ‘முஃபாஸா’ சிங்கத்தின் கதை தனியாக ‘முஃபாஸா: தி லயன் கிங்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
பபூன் குரங்கான ரஃபீகி சிம்பாவின் மகளிடன் சொல்லும் ஃபிளாஷ்பேக்தான் முழுக் கதை. சிறுவயதில் தனது தாய் நிலத்தை விட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் முஃபாஸா (தமிழில் அர்ஜுன் தாஸ் குரல்), வேறு சில சிங்கங்களில் ராஜ்ஜியத்தில் நுழைகிறது. அங்கு இருக்கும் டாக்கா (அசோக் செல்வன்) என்ற குட்டி சிங்கம் ஒன்று முஃபாஸாவின் நண்பனாகிறது. ஆனால், அந்தச் சிங்க கூட்டத்தின் தலைவனான முபாசி (நிழல்கள் ரவி) அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எனினும் வேண்டா வெறுப்பாக பெண் சிங்கங்களுடன் அதனை வளர அனுமதிக்கிறது.