Year Ender 2024: கொட்டுக்காளி முதல் தங்கலான் வரை - ‘ஆஸ்கர் லெவல்’ தமிழ்ப் படங்கள்
2024 ஆஸ்கர் விருதுக்கு இந்தியால் இருந்து ‘லாபத்தா லேடீஸ்’ இந்தி திரைப்படம் அதிகாரபூர்வ என்ட்ரியாக நுழைந்துள்ளது. அந்த ரேஸுக்கான பட்டியலில் இடம்பெற்ற வகையில், ‘ஆஸ்கர்’ லெவலுக்கு உரிய தமிழ்ப் படங்கள் குறித்த ஒரு விரைவுப் பார்வை இது...
2024 ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து ‘லாபத்தா லேடீஸ்’ இந்தி திரைப்படம் அதிகாரபூர்வ என்ட்ரியாக நுழைந்துள்ளது. அந்த ரேஸுக்கான பட்டியலில் இடம்பெற்ற வகையில், ‘ஆஸ்கர்’ லெவலுக்கு உரிய தமிழ்ப் படங்கள் குறித்த ஒரு விரைவுப் பார்வை இது...
கொட்டுக்காளி: ‘சாதி’ய ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும், பிற்போக்குத்தனங்கள், மூட நம்பிக்கை, ஆணாதிக்கத்தை கேள்வி எழுப்பிய தமிழின் முக்கியமான படைப்பு ‘கொட்டுக்காளி’. பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இந்தப் படம், அதன் முழுமையற்ற க்ளைமாக்ஸ் காரணமாக விவாதத்தை கிளப்பியது. பின்னணி இசை இல்லையென்றாலும், நிகழ்விட ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி எந்த ஒரு காட்சியிலும் தடுமாற்றம் இன்றி பார்வையாளர்களுக்கு புது அனுபவம் கொடுத்த படைப்பு.