அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

ஹைதராபாத்: அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் முதல் நாள் ரூ.294 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள்களை சேர்த்து ரூ.449 கோடியை வசூலித்தது. இந்நிலையில் தற்போது ரூ.500 கோடி வசூலை தாண்டியுள்ளது. கிட்டதட்ட 3 நாட்களில் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிகவேகமாக ரூ.500 கோடி வசூலித்து முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தி வெர்ஷனில் மட்டும் ரூ.205 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.