ஃபெஞ்சல் புயல் தாக்கம்: தென் மாவட்டங்களுக்கு புறப்பட வேண்டிய பகல் நேர விரைவு ரயில்கள் ரத்து
ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விரைவு ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென், மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த பெரும்பாலான ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து இன்று தென் மாவட்டங்களுக்கு புறப்பட வேண்டிய பகல் நேர விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து உள்ளனர்.