‘இளங்கோ குமணன் நேர்காணல்கள்’ நூல் அறிமுகம்
சென்னை சபாக்களில் தமிழ் நாடகங்கள்' என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்காக இளங்கோ குமணன், மேடை,நாடகம், நடிப்பு துறை சார்ந்த கலைஞர்களிடம் எடுத்த நேர்காணல்களின் முதல் தொகுதி நூலின் அறிமுக விழா நேற்று நடந்தது.
சென்னை: `சென்னை சபாக்களில் தமிழ் நாடகங்கள்' என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்காக இளங்கோ குமணன், மேடை,நாடகம், நடிப்பு துறை சார்ந்த கலைஞர்களிடம் எடுத்த நேர்காணல்களின் முதல் தொகுதி நூலின் அறிமுக விழா நேற்று நடந்தது. வேல்ஸ்பல்கலைக்கழக மொழிகள்புல முதல்வர் பேராசிரியர் முனைவர்ப.மகாலிங்கம் விழாவுக்கு தலைமைதாங்கி பேசியதாவது:
தமிழுக்கு பல பெருமைகளைச் சேர்த்த ராஜமாணிக்கனாரின் பேரன் இளங்கோ குமணன். சென்னை வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர் இவரின் தாயார் புனிதவதி இளங்கோவன். இவரின் குடும்பத்தினர் தமிழ் மொழிக்கு அரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். அவர்களின் வழியில், இளங்கோ குமணனின் இந்த ஆய்வு நூலும் எதிர்காலத்தில் முக்கியமான கவனத்தைப் பெறும் என்றார்.