உதகையில் உள்ள கர்நாடக அரசு பூங்காவில் முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டம்

உதகையில் உள்ள கர்நாடக அரசுக்குச் சொந்தமான தோட்டக்கலைத் துறைப் பூங்காவில் முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உதகையில் உள்ள கர்நாடக அரசு பூங்காவில் முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டம்

உதகையில் உள்ள கர்நாடக அரசுக்குச் சொந்தமான தோட்டக்கலைத் துறைப் பூங்காவில் முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடக மற்றும் தமிழக முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சுற்றுலாத் தலமான உதகைக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர்.