ஏற்காட்டில் ஒரே நாளில் 238 மி.மீ. மழை: மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு

ஃபெஞ்சல் புயலால் ஏற்காட்டில் 144.4 மில்லி மீட்டர்,  238 மில்லி மீட்டர் என அடுத்தடுத்த இரு நாட்களில் மிக கனமழை பெய்தது. இதனால், ஏற்காடு மலை கிராமங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஏற்காட்டில் ஒரே நாளில் 238 மி.மீ. மழை: மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு

சேலம்: ஃபெஞ்சல் புயலால் ஏற்காட்டில் 144.4 மில்லி மீட்டர், 238 மில்லி மீட்டர் என அடுத்தடுத்த இரு நாட்களில் மிக கன மழை பெய்தது. இதனால், ஏற்காடு மலை கிராமங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சேலம் ஏற்காடு சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவால் ஏற்காடுக்குச் செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல, ஏற்காட்டில் சனிக்கிழமை 144.4 மில்லி மீட்டர் மழையும் , ஞாயிற்றுக்கிழமை 238 மில்லி மீட்டர் என கனமழை கொட்டியது. காற்றுடன் பெய்த தொடர் மழையால் ஏற்காட்டில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.