தென் மாவட்டங்களில் கனமழை: தென்காசி அருகே தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு
கனமழை காரணமாக தென்காசியை ஒட்டிய தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் தொடர் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி: கனமழை காரணமாக தென்காசியை ஒட்டிய தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் தொடர் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளையனரேந்தல் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.