ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ரூ.2,152 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய பட்ஜெட் முன்னோட்ட கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய பட்ஜெட் முன்னோட்ட கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான முன்னோட்டக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.