வேலூர் இந்தியர்களுக்கு வீரம்மிக்க நிலமாகும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்
இந்தியர்களுக்கு வேலூர் வீரம் மிகுந்த, புண்ணிய நிலமாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
வேலூர்: இந்தியர்களுக்கு வேலூர் வீரம் மிகுந்த, புண்ணிய நிலமாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர உயிர்ச் சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியம் சார்ந்த குறைகளைத் தீர்க்கவும் வேலூர் விஐடி அண்ணா அரங்கில் நேற்று ‘ஸ்பர்ஸ்’ விளக்கம் மற்றும் குறைதீர் முகாம் நடைபெற்றது. சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.