தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணிக் கட்சிகள் முயற்சி - பாஜக குற்றச்சாட்டு
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி செய்வதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி செய்வதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவமதித்ததாக பொய் பிரச்சாரம் செய்து இந்தியா முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணியில் உள்ள 18 கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்திலும், திமுக அரசின் தூண்டுதலின் பேரில், கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி செய்வது வெட்கக்கேடானது.