எல்லை தாண்டி தொல்லையைக் கொடுக்கும் கேரளம்! - கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா தமிழகம்?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதி நீர்நிலைகளில் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதி நீர்நிலைகளில் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையெலெடுத்ததை அடுத்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறையினர் என அனைத்துத் தரப்பும் சோம்பல் முறித்து களத்தில் இறங்கியுள்ளனர்.
கழிவுகளை கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனும் எச்சரித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே கேரளத்தின் கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மாறிவிட்டன. இதேபோல் கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் கேரள கழிவுகளை அத்துமீறி கொட்டி வருகிறார்கள். இதை நிறுத்த எத்தனை முறை தமிழக அரசு கடிதம் எழுதினாலும் கேரளத்தின் அத்துமீறல் நின்றபாடில்லை.