அமித் ஷா பதவி விலகக் கோரி தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் மக்களின் கண்களைத் திறந்தார். ஜனநாயகத்தின் ஆணிவேராக இருந்தார். பாஜகவினர் மதத்தின் பெயரால் இந்தியாவில் அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துகள் அமைந்திருக்கிறது என்ற காரணத்தால், அவரை அழிக்க பாஜக எண்ணுகிறது, என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை: “அம்பேத்கர் மக்களின் கண்களைத் திறந்தார். ஜனநாயகத்தின் ஆணிவேராக இருந்தார். பாஜகவினர் மதத்தின் பெயரால் இந்தியாவில் அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துகள் அமைந்திருக்கிறது என்ற காரணத்தால், அவரை அழிக்க பாஜக எண்ணுகிறது,” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (டிச.19) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் வள்ளுவர் கோட்டம், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.