கஞ்சா கடத்தல் வழக்கில் ஊராட்சி தலைவர், கவுன்சிலருக்கு ஜாமீன்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவருக்கு ஜாமீன் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவருக்கு ஜாமீன் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம், இவரது மகன் அலெக்ஸ், விழுத்தமாவடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்கள் மீது கீழையூர் போலீஸார் கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மகாலி்ங்கம் கைது செய்யப்பட்டார். அலெக்ஸை போலீஸார் தேடி வருகின்றனர்.