கனமழை: நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு: கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 130 கல்லூரிகளில் இன்று (நவ.26) நடைபெறவிருந்து பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை பல்கலைக்கழக பதிவாளர் கல்லூரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளார். இன்று நடைபெறவிருந்த தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.