கனமழை பெய்வதால் சபரிமலையில் முகாமிட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்
சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனத்துக்குச் சென்று வருகின்றனர். பாதிப்புகளை களைய தேசிய பேரிடர் மீட்பு படை சபரிமலையில் முகாமிட்டுள்ளது.
தேனி: சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனத்துக்குச் சென்று வருகின்றனர். பாதிப்புகளை களைய தேசிய பேரிடர் மீட்பு படை சபரிமலையில் முகாமிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது. கார்த்திகை 12-ம் தேதியை முன்னிட்டு சபரிமலையில் தீப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரள பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.