‘கி.ரா. நூறு’ - இரு தொகுப்பு நூல்களை மார்ச் 13-ல் வெளியிடுகிறார் வெங்கய்யா நாயுடு

கி.ராவின் நூற்றாண்டு விழாவுடன் ‘கி.ரா. நூறு’ என்னும் இரு தொகுப்பு நூல்களை இம்மாதம் 13-ம் தேதி  ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு வெளியிடுகிறார்.

இது தொடர்பான செய்திக் குறிப்பு: ‘கி.ரா. நூறு’ என்னும் இரு தொகுப்பு நூல்களை கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தொகுத்தார். 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு 160 கட்டுரைகள் இறுதியாக்கப்பட்டு கி.ரா.நூறு என்ற இரு தொகுப்புகளாக வெளிவருகின்றன. வருகிற 13.03.2023 அன்று கதைசொல்லி, பொதிகை - பொருநை - கரிசல் சார்பில் இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (சத்யா ஸ்டுடியோ) முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு அவர்களால் காலை 9.30 மணியளவில் வெளியிடப்படுகிறது. நல்லி குப்புசாமி செட்டி, சுதா சேஷய்யன், ஆர்.எஸ்.முனிரத்தினம், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.