கிருஷ்ணாபுரம் அணையில் உபரி நீர் திறப்பு: பள்ளிப்பட்டு அருகே மூழ்கிய 3 தரைப்பாலங்கள்

ஆந்திர மாநிலம் -கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் மழைநீர் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு ஓடும் நீரில், பள்ளிப்பட்டு அருகே 3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.   

கிருஷ்ணாபுரம் அணையில் உபரி நீர் திறப்பு: பள்ளிப்பட்டு அருகே மூழ்கிய 3 தரைப்பாலங்கள்

திருத்தணி: ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் மழைநீர் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு ஓடும் நீரில், பள்ளிப்பட்டு அருகே 3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. 199.27 மில்லியன் கன அடி கொள்ளளவுக் கொண்ட இந்த அணை, தமிழக- ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்த கன மழையால், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நேற்று இரவு 9 மணி முதல், இன்று அதிகாலை 5.50 மணிவரை விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீரை ஆந்திர நீர் வளத் துறையினர் திறந்தனர். அவ்வாறு திறக்கப்பட்ட நீர், ஆந்திர, தமிழக பகுதிகளில் உள்ள குசா மற்றும் லவ ஆறுகள் வழியாக, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றுக்கு இன்று அதிகாலையில் வந்தடைந்தது.