கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணம்!
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் சில தினங்களுக்கு முன்பு இந்து முறைப்படி நடைபெற்ற நிலையில், இன்று கிறிஸ்தவ முறைப்படியும் கோவாவில் நடைபெற்றது.
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் சில தினங்களுக்கு முன்பு இந்து முறைப்படி நடைபெற்ற நிலையில், இன்று கிறிஸ்தவ முறைப்படியும் கோவாவில் நடைபெற்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி நண்பர் ஆன்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாக அறிவித்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, ஆன்டனி தட்டில் - கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் அண்மையில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்காக கோவா சென்றிருந்த தவெக தலைவரான நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.