சபரிமலையின் 3 இடங்களில் மழைமானி மையங்கள் அமைப்பு

சபரிமலையில் பெய்யும் மழையின் அளவை நேரடியாக அறிந்து கொள்ள 3 இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிகாரி அருண் எஸ் நாயர் தெரிவித்துள்ளார்.

சபரிமலையின் 3 இடங்களில் மழைமானி மையங்கள் அமைப்பு

தேனி: சபரிமலையில் பெய்யும் மழையின் அளவை நேரடியாக அறிந்து கொள்ள 3 இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிகாரி அருண் எஸ் நாயர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை நவ.16-ம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இங்கு பெய்து வரும் மழை பக்தர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பெரியபாதை, புல்மேடு வழியாக வனப்பாதையில் நடந்து வரும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடுங்குளிரை எதிர்கொண்டு கடந்து செல்கின்றனர்.