‘ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறு செயல்திட்டம் இருக்கிறது’ - திருமாவளவன் கண்டனம்

ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில் முரண்பாடான கருத்தை கூறுவது தவறு. ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை உணர முடிகிறது. எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

‘ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறு செயல்திட்டம் இருக்கிறது’ - திருமாவளவன் கண்டனம்

திருச்சி: “ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில் முரண்பாடான கருத்தை கூறுவது தவறு. ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை உணர முடிகிறது. எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார்.” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.