சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: திருப்பூரில் அதிமுக கவுன்சிலர்கள் முக்காடு போட்டு போராட்டம்
திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் முக்காடு போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அதிமுக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர்: திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் முக்காடு போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அதிமுக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்களை திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று ( நவ. 28) தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கிய 2 நிமிடங்களில், அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை மற்றும் கருப்பு சேலை அணிந்து வந்து பேசத் துவங்கினர்.