ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்: இடதுசாரி கட்சிகள் கருத்து
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்’ என, இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.
சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்’ என, இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநில செயலாளர் பழ. ஆசைத் தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளைப் மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான சட்ட முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.