ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைப்பது எப்போது? - போக்குவரத்து ஆணையர் பதில்
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை.