சாலையோர வியாபாரிக்கு அடையாள அட்டை: சிறப்பு முகாம் டிச.31 வரை நீட்டிப்பு

மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகம் நீட்டித்துள்ளது.

சாலையோர வியாபாரிக்கு அடையாள அட்டை: சிறப்பு முகாம் டிச.31 வரை நீட்டிப்பு

சென்னை: மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகம் நீட்டித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப் படுத்துவதற்காக சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.