சென்னை மழைநீர் வடிகால் பணி: திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்
உளுந்தூர்பேட்டையில் திருச்சி-சென்னை-சேலம் சந்திப்பு ரவுண்டானா அருகே திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தலைமையில் ரூ.40 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
விழுப்புரம்: “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்காது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் திருச்சி - சென்னை-சேலம் சந்திப்பு ரவுண்டானா அருகே திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தலைமையில் ரூ.40 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அன்னதான மண்டப கட்டுமானப் பணியை இன்று தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.