“அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினை...” - திருமாவளவன் சாடல்
அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அப்படி இல்லை எனவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு முன்மொழிவும் வரவில்லை என மத்திய பாஜக அரசு மறுதலித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.