“சேறு வீசியதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை” - அமைச்சர் பொன்முடி
67 நிவாரண முகாம்களில் 4,906 பேர் தங்கி யுள்ளனர். தென்பெண்ணையாற்று கரையோரம் உள்ள திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சேறு வீச்சு சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி நேற்று மாலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 சென்டிமீட்டரும், விழுப்புரம் நகரில் 63.5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.