விழுப்புரம் மாவட்டத்தின் 1,287 ஏரிகளில் 553 ஏரிகள் மட்டுமே நிரம்பின - ஏன் இந்த நிலை?
விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்டத்தில் 240 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்டத்தில் 240 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத் தின் கட்டுப்பாட்டில் உள்ள 782 ஏரிகளில் 48 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 505 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இவற்றில் 103 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.