டங்ஸ்டன் சுரங்க பணிக்கு எந்த அனுமதியும் தரவில்லை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்​கொள்ள தமிழக அரசு எந்த அனும​தி​யும் அளிக்க​வில்லை என்று நீர்​வளத் துறை அமைச்சர் துரை​முருகன் தெரி​வித்​துள்ளார்.

டங்ஸ்டன் சுரங்க பணிக்கு எந்த அனுமதியும் தரவில்லை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்​கொள்ள தமிழக அரசு எந்த அனும​தி​யும் அளிக்க​வில்லை என்று நீர்​வளத் துறை அமைச்சர் துரை​முருகன் தெரி​வித்​துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் தெரி​வித்​திருப்​ப​தாவது: மக்களின் வாழ்​வா​தாரத்தை பாதிக்​கும் எந்த சுரங்கப் பணிகளுக்​கும் தமிழக அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதி​யளித்து, இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​துக்கு அளிக்​கப்​பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்​யு​மாறு வலியுறுத்தி பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதி​யுள்​ளார். இதை ஏற்று பொது மக்கள் போராட்டத்தை விலக்​கிக் கொண்​டுள்ளனர்.