வெள்ளத்தில் தத்தளித்த சென்னை, புறநகர் பகுதிகள் - ஃபெஞ்சல் புயல் பாதிப்பு என்ன?
சென்னை, புறநகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
சென்னை: சென்னை, புறநகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
சென்னையில், ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் நடுப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. கோயம்பேட்டை சுற்றியும் மழைநீர் தேங்கியது. ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே குளம்போல் மழைநீர் தேங்கியிருந்தது.