திருவள்ளூரில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 2 செ.மீ., பெய்துள்ளது. ஆவடி மாநகராட்சி பகுதிகள், திருநின்றவூர் நகராட்சி பகுதிகள், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம், பாடியநல்லூர் ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் செங்குன்றம் ஜி.என்.டி. சாலை, திருவள்ளூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

திருவள்ளூரில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 2 செ.மீ., பெய்துள்ளது. ஆவடி மாநகராட்சி பகுதிகள், திருநின்றவூர் நகராட்சி பகுதிகள், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம், பாடியநல்லூர் ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் செங்குன்றம் ஜி.என்.டி. சாலை, திருவள்ளூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி.சாலையில் தாமரை ஏரி நிரம்பி, மழைநீரோடு, கழிவு நீர் கலந்து ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆவடி அருகே உள்ள கோயில்பதாகை ஏரியும் நிரம்பி, குடியிருப்பு பகுதிகள், சாலைகள் வழியாக உபரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.