டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியவரே ஸ்டாலின்தான்” - இபிஎஸ்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு கடந்த அக்டோபர் மாதத்தில் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்போது ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார், என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம்: “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு கடந்த அக்டோபர் மாதத்தில் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்போது ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்,” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பூத்துக்கு 10 நிர்வாகிகளை நியமித்து, அவர்கள் தலா 100 வாக்குகளை சேகரிக்க வேண்டும்.