தடதடக்கும் ஆக் ஷனில் தவெக மாவட்ட தலைவர்! - மற்றவர்களை மலைக்க வைக்கும் மலர்விழி ஜெயபாலா

மலர்விழி ஜெயபாலா இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி மீனவ குடிசைகளுக்குள் இருந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சுமார் 200 பேருக்கு உணவு வழங்கியதுடன், மோசமாக பாதிக்​கப்பட்ட ஒரு குடும்பத்​துக்கு நிவாரண உதவியாக ரூ.30 ஆயிரத்தை எடுத்துக் கொடுத்​தார்.

தடதடக்கும் ஆக் ஷனில் தவெக மாவட்ட தலைவர்! - மற்றவர்களை மலைக்க வைக்கும் மலர்விழி ஜெயபாலா

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. அதேசமயம், கிராம அளவில் கட்சிக்கு வலுவான அடிப்படைக் கட்டமைப்பை வைத்திருக்கும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மத்தியில், அடிப்படைக் கட்டமைப்பே இல்லாத விஜய்யால் எப்படி வாகை சூடமுடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இப்படிக் கேட்பவர்களை எல்லாம் ராமநாதபுரம் மாவட்ட தவெக தலைவர் மலர்விழி ஜெயபாலா திகைத்து திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்னும் மாவட்ட வாரியாக செயலா​ளர்கள் நியமிக்​கப்​பட​வில்லை. விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவராக இருந்​தவர்​களில் பலர் தவெக மாவட்ட தலைவர்களாக செயலாற்றி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் ராமநாத​புரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா. நவம்பர் 21-ம் தேதி ஒரே நாளில் ராமேசுவரத்தில் 44 செ.மீ, அளவுக்கு பேய்மழை கொட்டித் தீர்த்தது.