தனுஷின் ‘குபேரா’ படத்தின் கதைக்களம் என்ன?
தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் கதைக்களம் என்னவென்று தெரியவந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் கதைக்களம் என்னவென்று தெரியவந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘இட்லி கடை’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இரண்டிலுமே முழுக்க இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த இரண்டு படங்களுக்கு இடையே சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வந்தார். இதன் போஸ்டர்கள், டீஸர் ஆகியவை இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. வழக்கமான படமாக இல்லாமல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தார்கள்.